ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மாநாடு நாளை நடைபெறும்!

'ஃபீல்ட மார்ஷல்' சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு மாநாடு நாளை 08.05.2015 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ப.நோ.கூ.சங்க மாநாட்டு மண்டபத்தில் மாலை 06:30 மணிக்கு மண்டல மத்திய குழுத் தலைவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சகோதரர் ஏ.எம்.ஏ. மிப்ஷி அவர்களின் தலைமையில் இம்மாநாடு நடைபெறும்.

இம்மாநாட்டிற்கு பிரதம அதிதியாக ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயருமான திருமதி சிவகீதா பிரபாகரன், சிறப்பு அதிதியாக கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் காத்தான்குடி ப.நோ.கூ.சங்கத் தலைவருமான சகோதரர் எம்.எஸ்.எம். ஷாபி, கௌரவ அதிதியாக கல்குடாத் தொகுதி அமைப்பாளர் சகோதரர் எம். புகாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இம்மாநாட்டில் ஜனநாயகக் கட்சியின் ஏறாவூர் மண்டல மத்திய குழுவின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கான நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.

காத்தான்குடி மண்டல மத்திய குழு நிர்வாகிகள், அங்கத்தவர்களுடன், உள்ளுர் பிரமுகர்கள் பலரும் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டின் ஏற்பாடுகள் யாவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மண்டலப் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -