ரூ.7 லட்சம் தங்க கடிகாரத்தை நாய்க்கு அணிவித்த கோடீசுவரர்!

சீனாவில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக இருப்பவர் வாங்ஜியன்லின். இவர் சீனாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவரது ஒரே மகன் வான்சிகாங் (வயது 27).

இவர் தனது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாயின் 2 முன்கால்களிலும் விலை உயர்ந்த தங்க கடிகாரத்தை அணிவித்துள்ளார். இந்த கடிகாரம் ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ள விலை உயர்ந்த டிஜிட்டல் வசதி கொண்டதாகும். தங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தின் விலை ரூ.7 லட்சம்.

நாய்க்கு விலை உயர்ந்த கடிகாரம் அணிவித்திருப்பது பற்றி வான்சிகாங் கூறும்போது, இது எனது செல்ல நாய் இதற்காக எவ்வளவு செலவு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். தற்போது 2 கடிகாரம் மட்டுமே வாங்கியதால் அதை 2 கால்களில் அணிவித்திருக்கிறேன். விரைவில் மேலும் 2 கடிகாரம் வாங்கி மற்ற 2 கால்களிலும் அணிவிக்கப்போகிறேன் என்று கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -