இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து நெதர்லாந்துப் பிரஜைகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 19 மாதங்கள் மற்றும் 75 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இவர்கள் 43 - 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த ஐவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், குற்றம்சாட்டப்பட்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது.(ந)
