கள்ளக் காதலியை அடித்தே கொன்ற இலங்கையருக்கு மரண தண்டனை!

னைவி விடுமுறை நிமித்தம் வௌிநாட்டிற்கு சென்றிருந்த வேளை, தனது கள்ளக் காதலியைக் கொன்றதாக கூறப்படும் இலங்கையர் ஒருவருக்கு பஹ்ரெனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஹென்றி ஜோஸ்டன் டி சில்வா எனும் இவர் பிரிலிகா குமாரி என்ற பெண்ணுடன் தொடர்பினை பேணி வந்துள்ளதாகவும், அவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே கொலை செய்துள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, தான் பிரிதொரு ஆடவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து கொலையாளி தனது பேஸ்புக்கை ஹக் செய்துள்ளதாக, கொலை செய்யப்படும் முன் பாதிக்கப்பட்ட பெண் தனது தோழியிடம் கூறியுள்ளார். 

கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதமளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அதேநாளில் கொலையாளி அந்தப் பெண்ணை வேலை முடிந்ததும் வீட்டுக்கு அழைத்துச் சென்று வெற்றுக் கைகளாலேயே அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

பின், விபத்தில் அவர் இறந்தது போல் காட்ட, சடலத்தை சமயலறைக்கு எடுத்துச் சென்று சமையல் எரிவாயுவைத் திறந்து பற்ற வைக்க முயற்சித்துள்ளார். 

எனினும் அவரது அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. எரிவாயு மணம் காரணமாக அயலவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்றைய தினம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -