நுவரெலியா கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை நகர தீ விபத்தில் 3 கடைகள் சேதம்!

அபு அலா -
நுவரெலியா கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை நகரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு 7.00 மணியளவில் ஏற்பட்ட தீ காரணமாக கடை ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இரு கடைகள் பகுதியளவில் சேதங்களுக்குள்ளாகியுள்ளது. 

இதனைக் கண்ட அயலவர்கள் நுவரெலியா மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவிற்கு அறிவித்தல் விடுத்ததையடுத்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தீயணைக்கும் பிரிவினர் குறிப்பிட்ட இடத்துக்கு விஜயம் செய்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீக்கான காரணம் குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ந)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -