தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆனந்த சங்கரி தலைமையில் 20ஆம் தேர்தல் சட்ட ஊடக மாநாடு!

அஸ்ரப் ஏ சமத்-
மிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆனந்த சங்கரி தலைமையில் அவரது கொழும்பு வீட்டில் நேற்று 20ஆம் தேர்தல் சட்டம் சப்பந்தமாக ஊடக மாநாடு நடைபெற்றது. 

அதில் இவ் அமைப்பின் செயலாளர் எம்.ஜ.எம். மொஹிடின், உபதலைவர் பாராளுமன்ற உறுப்பிணர் ஹூனைஸ் பாருக் காலாநிதி குமர குருபரன், மற்றும் இளைய தம்பி சாந்த முகன் ஆகியோர் உத்தேச தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வழங்கப்பட்ட விடயங்கள்220 மக்கள் பிரதிநிதிகள் சபை அங்கத்தினர்கள் அரைப்பங்கினர் ஆட்புலத் தேர்தல் தொகுதிகளிலிருந்து எப்.பீ.பீ முறை மூலமும், எஞ்சிய அரைப் பங்கினர் மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் கட்சிகள்ஃ குழுக்களிலிருந்தும் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

பாராளுமன்றத்தின் 220 ஆசனங்கள் பின்வருமாறு ஒதுக்கப்படல் வேண்டும். 

இனத்துவக் குழு - வீதம் - ஆசனங்கள் - ஆசனங்கள் - மொத்தம் எப்.பீ.பீ வி.பி.
சிங்களவர்கள் 71 78 78 156
தமிழர்கள் 12 13 13 26
முஸ்லிம்கள் 10 11 11 22
இந்திய தமிழர்கள் 07 08 08 16
விருப்பு வாக்கு, வெட்டுப்புள்ளி மற்றும் மாவட்ட போனஸ் என்பவை ஒழிக்கப்பட வேண்டும். 

.  பொதுசன ஐக்கிய முன்னணித் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மக்கள் அளித்த பணிப்பாணைக்கு உறுதியான சமர்ப்பணத்தோடு செயலாற்ற வேண்டுமென்று சிறுபான்மை சமூகம் வலியறுத்துகின்றது.

ஆ. புதிய அரசியலமைப்பின் கீழான தேர்தல் சீர்திருத்தங்கள் சகலசமூகத்தினருக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்குதல் வேண்டும். பாராளுமன்றம் உண்மையான தேசிய இனத்துவ விகிதாசாரத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.

. மாகாண சபைகளுக்கு கூடுதலான அதிகாரப் பகிர்வை நோக்கும்போது பாராளுமன்றம் அங்கத்தவர் தொகை பெரிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது உள்ளஅங்கத்தவர்கள் தொகையான 225 குறைக்கப்படுதல் வேண்டும்.

ஈ. 220 மக்கள் பிரதிநிதிகள் சபை அங்கத்தினர்கள் அரைப்பங்கினர் ஆட்புலத் தேர்தல் தொகுதிகளிலிருந்து எப்.பீ.பீ முறை மூலமும், எஞ்சிய அரைப் பங்கினர் மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் கட்சிகள்/குழுக்களிலிருந்தும் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

உ. இரண்டு வாக்குகள்- ஒன்று ஆட்புலத் தேர்தல் தொகுதிகளுக்கு எப்.பீ.பீ முறை மூலம் அபேட்சகரைத் தெரிவு செய்வதற்கும், மற்றது மாவட்ட விகிதாசாரப் பிரதிநித்துவ முறையில் கட்சியைஃ குழுவைத் தெரிவு செய்வதற்கும்.

ஊ. பாராளுமன்றம் மக்களின் உண்மையான வாக்களித்தற் பாங்கைப் பிரதிபலித்தல் வேண்டும். ஒவ்வொரு கட்சியும் ஃ குழுவும் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் மொத்த அங்கத்தவர்களைத் தீர்;மானிக்கும் காரணி விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்பெறப்பட்ட வாக்குகளாயிருத்தல் வேண்டும்

எ.  ஓர் அங்கத்தவர் தேர்தல் தொகுதிகள் 72தர1ஸ்ரீ72 அங்கத்தவர்கள், இரு அங்கத்தவர் தேர்தல் தொகுதிகள் 10தர2 - 20 அங்கத்தவர்கள். மூன்று அங்கத்தவர்தேர்தல் தொகுதிகள் 6தர3-18 அங்கத்தவர்கள். மொத்த ஆட்புலத் தேர்தல்தொகுதிகள் 88, அங்கத்தவர்கள் 110

ஏ.  பாராளுமன்றத்தின் 220 ஆசனங்கள் பின்வருமாறு ஒதுக்கப்படல் வேண்டும். 

எல்லை மீள்வரைவுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு சிறுபான்மை சமூகத்தினரின் தேசிய விகிதாசார பிரதிநிதித்துவம் சாத்தியமாகும் வழியில் பொருத்தமான பிரதேசங்களில் பல அங்கத்தவர் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் அதிகாரம்கொண்டதாயிருத்தல் வேண்டும்.

தேர்தல் தொகுதிகளை மீள்வரைவு செய்யும்போது தேர்தல் பலம் குறைவாயிருப்பது,சிறுபான்மையோருக்கு தேசிய இனத்துவ விகிதாசாரத்தின் பிரகாரம் போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு அனுகூலமான வகையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு செயற்பட வேண்டும்

கட்சி தாவுதல் தடை செய்யப்படல் வேண்டும்இலங்கை சிறுபான்மை மக்கள் பிரதிநிதித்துவமும் தேர்தல் முறைசார் சீர்திருத்தங்களும்1970 மே 27ம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சோல்பரி அரசியலமைப்பை நீக்குமாறு பணிப்பாணை பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு புதிய அரசியலமைப்பைவரைந்தது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தைத் தேசிய அரசுப் பேரவையாகப்பிரகடனஞ் செய்ததோடு சோல்பரி அரசியலமைப்பு சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்கென வழங்கியிருந்த சில முக்கிய ஏற்பாடுகளையும் நீக்கியது. சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினங்களுக்குச் சில பாதுகாப்புக்களைவழங்கவென வடிவமைக்கப்பட்டிருந்த பிரிவு 29(2) மற்றும் (3) இன் ஏற்பாடுகள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குடியரசு அரசியலமைப்பில் இடம்பெறவில்லை.பிரதிநிதித்துவம் பெறாத அல்லது போதியளவு பிரதிநிதித்துவம் பெறாத நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு அங்கத்தினர்களை நியமனஞ் செய்யும் ஏற்பாடுகளும் குடியரசு அரசியலமைப்பில் மீள இடம்பெறவில்லை. சிறுபான்மையின மக்கள் தமதுகருத்துக்களையும் மனக்குறைகளையும் வெளியிடுவதற்கு ஒரு மேடையாக உபயோகித்து வந்த செனட் சபையும் புதிய அரசியலமைப்பில் இல்லாதொழிக்கப்பட்டது.

1977 ஜூலை 21ம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 1978 செப்டெம்பர் 7ம் திகதி ஒரு புதிய அரசியலமைப்பை வரைந்தது. சிறுபான்மையினருக்கான பாதுகாப்புக்களை ஒழித்ததைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியலமைப்பு 1972 இன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியலமைப்பை ஒத்ததாகவேஇருந்தது. இரு அரசியமைப்புகளுமே சோல்பரி அரசியலமைப்பின் 29 ம் பிரிவின் ஏற்பாடுகளை மீளக்கொணர்வதையும் நியமன அங்கத்தவர் கோட்பாட்டை மீளவும் ஏற்படுத்துவதையும், செனட் சபைக்குப் புத்துயிரூட்டுவதையும் தவிர்த்துக் கொண்டன.

நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கான ஏற்பாடுகள். தேர்தல் மாவட்ட எல்லைகள் மீள்வரைவு, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைமை என்பவை ஐக்கிய தேசியக் கட்சி ஜயவர்த்தன அரசியலமைப்பினால் அறிமுகஞ் செய்யப்பட்ட கூடுதலான தீங்கு விளைவிக்கும் போக்கிலான ஏற்பாடுகளாகும். இவை சிறுபான்மை சமூகம் ஒன்றரைநூற்றாண்டு காலத்துக்கு மேலாக இந்த நாட்டில் அனுபவித்து வந்த உரிமைகளைச் சிதைத்துச் சீர்குலைத்துவிட்டது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் தற்போதைய அரசியல் அமைப்பை மாற்றுவதெனில் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டுபெரும்பான்மையும் மக்கள் வாக்கெடுப்பும் அவசியமென்று சொல்லப்படுகிறது. 

1977 இல் ஐக்கிய தேசிய கட்சிக்கு 5/6 பெரும்பான்மை கிடைத்ததோடு முன்னாள் ஜனாதிபதி ஜயவர்த்தன புதிய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையை அறிமுகம் செய்தார். 

இந்த முறைமையின் கீழ் எந்த அரசியல் கட்சியும் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வது பெரும்பாலும் இயலாத விடயமாகும். வேறுவார்த்தைகளிற் கூறுவதெனின் 1978அரசியலமைப்பில் அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் கூட சட்டபூர்வமாக மாற்றியமைப்பது இயலாதது. இது ஜயவர்த்தன அரசியமைப்பின் நச்சுத்தனமான அம்சங்களுள் ஒன்றாகும்.

இடைத்தேர்தல்களுக்கு விகிதாசார பிரதிநித்துவத்தைப் பிரயோகிக்க முடியாது. வெற்றிடங்கள் ஏற்படுகையில் தேர்தல் தொகுதி வாக்காளர்களின் அபிப்பிராயத்துக்கு எவ்வித மதிப்பும் இன்றி அல்லது நியமனம் பெறுபவருக்கு அம்மக்களோடு உள்ள தொடர்பு குறித்து எவ்விதத்திலும் ஆராயாது, கட்சி விசுவாசிகளைக் கொண்டு அவை நிரப்பப்படுகின்றன.

1976 ஆம் ஆண்டின் எல்லை மீள்வரைவு

1976 ஆம் ஆண்டின் எல்லை மீள்வரைவு ஆணைக்குழு 1971 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பு விபரங்களை உபயோகித்தது. சனத்தொகை 12,711,143 பிரஜைகள்; 11,605,903 தேர்தல் தொகுதியொன்றுக்கு 90,000 மக்கள் என்னும் அடிப்படையில் 143 ஆட்புலத்தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. 100 சதுர மைல் நிலப்பரப்புக்கு ஒரு தேர்தல் தொகுதியெனும் அடிப்படையில் 25 மேலதிக தேர்தல் தொகுதிகள் சேர்க்கப்பட்டன. மொத்தமாக 160 ஆட்புலத் தேர்தல் தொகுதிகளிலிருந்து 168 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

1,105,240 பிரஜாவுரிமையற்றோர் வாக்குரிமை இல்லாத காரணத்தால்சனத்தொகையில் அவர்களின் தொகைக்குரிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியவில்லை. 

இது 71 வீதமான சிங்களவர்களுக்கு உரியதல்லாத அனுகூலமாகிய 82 வீதமான அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கியது. அதேவேளையில்சிறுபான்மையோராகிய 12 வீதத் தமிழர்கள் 7 வீதமான அங்கத்தவர்களையும் 8 வீதமான முஸ்லீம்கள் 5 வீதமான அங்கத்தவர்களையும் 6 வீத இந்தியத் தமிழர்கள் 3வீதமான அங்கத்தவர்களையே தெரிவு செய்தனர்.

1976 இன் எல்லை மீள்வரைவு ஆணைக்குழு ஆட்புலத் தேர்தல் தொகுதி எல்லை மீள்வரைவில் ஈடுபடுகையில் சிறுபான்மையோர் நலன்கள் விடத்தையும் கவனத்திற்கெடுத்தல் வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு நேர்மாறாக எல்லை மீள்வரைவு ஆணைக்குழு அக்கரைப்பற்று முஸ்லிம் சிறுபான்மைக் கிராமத்தில் காணப்படுவதுபோன்று மக்களின் ஒரு பகுதியினர் பொத்துவில் தொகுதியிலும் ஏனையோர் சம்மாந்துறைத் தேர்தல் தொகுதியிலும் இடம்பெறுமாறு பிரித்து அவர்களை அரசியல் ரீதியில் பலவீனமுறச் செய்துள்ளது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இயன்ற அளவுக்குச் சமமான தொகையினரான வாக்காளர்கள் இருத்தல் வேண்டுமென்ற பொதுவான விதிக்கு சிறுபான்மையோர் நலன்கள் பிரதிநிதித்துவ விடயத்தில் மட்டுமே புறநடைகள் ஏற்படுத்தப்பட்டன, ஆயினும் கண்டி, தெல்தெனியா, வியாலுவ மற்றும் கொழும்பு மேற்கு போன்ற சிங்களவர் பெரும்பான்மைப் பிரதேசங்களில் சராசரி வாக்காளர் தொகைக்கு அரைவாசிக்கும் குறைவான தொகையில் எல்லை மீள்வரைவு ஆணைக்குழு தேர்தல் தொகுதிகளை உருவாக்கியது.

1981 ஆம் ஆண்டின் எல்லை மீள்வரைவு

1981 இல் எடுத்திருக்க வேண்டிய பொதுக் குடிசன மதிப்பு எடுக்கப்படாமலே 1981 இன் எல்லை மீள்வரைவு செய்யப்பட்டது. அது 1976 ஆம் ஆண்டின் எல்லை மீள்வரைவு தீர்மானித்த 160 ஆட்புலத் தேர்தல் தொகுதிகளை மாற்றாமல் அப்படியே தொடர்ந்தும் இருக்க அனுமதித்தது. சனத்தொகைக்கோ, நிலப்பரப்புக்கோ எவ்விதகவனமும் செலுத்தாது, ஒரு மாகாணத்துக்கு 4 ஆசனங்கள் என்ற ரீதியில் மேலும் 36 ஆசனங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. தேசிய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கென மேலும் 29 ஆசனங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறாகப்பாராளுமன்றத்தின் மொத்த அங்கத்தவர் தொகை 225 ஆகியது.

தேர்தல் தொகுதிகள் எல்லை மீள்வரைவு மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைமை குறித்து 1978 அரசியலமைப்பின் ஏற்பாடுகள் பயனளவில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை இல்லாமற் செய்தன. 

22 தேர்தல் மாவட்டங்களில் 18 தேர்தல் மாவட்டங்களில் தமது சொந்தப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்துக்காக ஏனையோரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதிநிதி, அவர் எவ்வளவு நல்லவராக இருந்தபோதிலும், முஸ்லிம் சமூகம் தானே தேர்ந்தெடுக்கும் ஒரு பிரதிநிதிக்குப் போதிய பதிலீடாக அமைய முடியாது. தேர்தல்முறை சீர்திருத்தத்திற்கான சிறுபான்மை மக்கள் பிரேரணைகள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -