கட்டாரின் செகெலியா எனும் பகுதியில் 350 இலங்கை பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.
கட்டாரிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது.
இதன் காரணமாக தாம் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து, உணவு உறைவிடமற்ற நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் இதுபற்றி கவனம் செலுத்தி தமக்கான நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை சகோதர செய்திச்சேவை தொடர்புகொண்டு வினவியபோது, தீவிபத்து தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.(NF)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -