வீடமைப்பு, கட்டட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்தார்!

வீடமைப்பு, கட்டட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொழும்பு 07, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை (29) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

மூன்று தினங்கள் நடைபெறும் இக்கண்காட்சி வீடமைப்பு மற்றும் கட்டிட நிர்மாணத்துறை பற்றிய பல காட்சி கூடங்களை கொண்டுள்ளது. கட்டிட நிர்மாணம், பொறியியல், கட்டிடக்கலை தொழில்நுட்பம், நவீன தளபாடங்கள் மற்றும் இத்துறையில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பெறுவதற்கு இக்கண்காட்சி ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ஏராளமானோர் இதனைக் கண்டு கழிக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -