வலம்புரி கவிதா வட்டத்தின் 15ஆவது பௌர்ணமி கவியரங்கு அமரர் கவிஞர் நீலாவணன் அரங்கு!

லம்புரி கவிதா வட்டத்தின் 15ஆவது பௌர்ணமி கவியரங்க நிகழ்வு அமரர் கவிஞர் நீலாவணன் அரங்காக கடந்த 03.05.2015 அன்று ஞாயிறு காலை 10.00 மணிக்கு கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் தலைமையில் நடைபெற்றது. 

பிரதம அதிதியாக மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் கலந்து சிறப்புரை ஆற்றினார். வகவத்தின் 15ஆவது கவியரங்கு கவிஞர் கவிநேசன் நவாஸ் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கவியரங்கில் கவிஞர்கள் பிரேம்ராஜ், தனபாலன், கல்முனை ஏ. பீர் முஹம்மத்,
ஏ.எஸ்.எம்.நவாஸ், வெலிமடை ஜஹாங்கீர், மட்டக்களப்பு லோகநாதன், கவிக்கமல் ரஸீம், கலாவிஸ்வநாதன், இப்னு அசூமத், ரஷீதா நவாஸ், கலைக்கமல், கலைவாதி கலீல், மேமன்கவி ஆகியோர் தங்களுக்கே உரிய பாணியில் கவிதை பாடி சபையை கவர்ந்தனர்.

சிறப்பதிதியாக கலந்து கொண்ட மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்கள் கவிஞர் நீலாவணன் பற்றி ஆற்றிய சிறப்புரையில் "கவிஞர் நீலாவணன் நெருப்புக் கவிஞர் என பெயர் பெற்றவர். அவர் மிகச் சிறப்பான கவிதைகளை எங்களுக்குத் தந்துள்ளார். அதனால் இன்றும் அவர் நினைவுக் கூரப்படுகின்றார்" என்றார்.

மேலும், நீலாவணனின் புகழ் பெற்ற கவிதையான முருங்கைக்காய் கவிதையை பற்றி குறிப்பிட்டதோடு கல்முனையில் அவர் நிறுவிய தமிழ்ச் சங்கம் குறித்தும் அவரோடு தனக்கிருந்த தொடர்புகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரையும், பொருளாளர் கலையழகி வரதராணி நன்றியுரையும் நிகழ்த்தினர்.

உடுவை தில்லை நடராஜா, டொக்டர் தாசிம் அகமது, ரவூப் ஹசீர், பாஸில், ரஷீத் எம்.ரியாழ், ஜோபு நசீர், எஸ்.எச்.எம்.இத்ரீஸ், எஸ்.ஏ.கரீம், ஈழகணேஷ்,
சிவா போன்றோர் சபையை அலங்கரித்தனர்.

சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்ட மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்கள்
தனது நூல்களின் சில பிரதிகளை வகவத்திற்கு கையளித்தார்.

16ஆவது வகவ கவியரங்கு கவிஞர் தனபாலனின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.(ந)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -