பாறுக் ஷிஹான்-
பௌத்த மக்களின் வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பொது மன்னிப்பு வழங்கி 1400 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக இச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்கள் செய்தோர் மற்றும் நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டப்பணங்களை செலுத்த முடியாது சிறைத் தண்டனை பெற்றோர் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன் தன்சல் மென் பானங்கள் சிறைச்சாலை வீதியினால் செல்வோருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளின் நெறிப்படுத்தலில் கைதிகள் வழங்குவதை காணமுடிகின்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)