கல்குடாத் தொகுதியில் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!

நவோஜ்-

ரசாங்கத்தின் நூறு நாள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற தொனிப் பொருளில் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் கிராமங்கள் தோறும் பல்வேறு அபவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை தெற்கு கிராம சேகவர் பிரிவில் கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி புஹாரி ஆலிம் குறுக்கு வீதிக்கு வடிகான் அமைப்பதற்காகவும், பதுரியா மாஞ்சோலை பள்ளிவாயல் வீதிக்கு வடிகானுக்கு மூடியிடுவதற்குமாக அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.நௌபல், உதவித் திட்டப் பணிப்பாளர்களான எஸ்.ஏ.றியாஸ், எச்.எம்.எம்.றுவைத், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற வேலைத் திட்டத்திற்கு பத்து இலசட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மக்களின் பங்களிப்பு இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாவுடன் ஒவ்வொரு வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -