திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைய முயற்சி!

க்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்து கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள போதிலும், கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க இறுதி தீர்மானத்தை அறிவிக்காததால், அத்தநாயக்க கட்சியில் இணைவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

எனினும் தான் எடுத்த அந்த முடிவு குறித்து அவர் பல சந்தர்ப்பங்களில் கவலையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலர் அத்தநாயக்கவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதுடன் அவர்களே அவரை மீண்டும் கட்சியில் இணைக்கும் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -