எதிர்வரும் பொது தேர்தலில் எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். பொலன்னறுவையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தனது குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆசனத்தை எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனது பிள்ளைகள், சகோதரர்களை தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என உறுதி செய்துள்ளதுடன், தமது குடும்பத்தினரை அரசியலில் இருந்து வெளியே வைத்து தான் உலக நாடுகளுக்கு ஒரு உதாரணமாக செய்ற்படவுள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும் அரசியல் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி அதிகாரம் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
