பாறுக் சிகான்-
மீள்குடியேறிய யாழ் முஸ்லீம் மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் முயற்சியினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (9) பிற்பகல் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது பல விடயங்கள் ஆராயப்பட்டன.
இதன் போது அப்பகுதி மக்கள் தங்கள் பிரச்சினைகளை மாகாண சபை உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனடிப்படையில் தனது பிரமாண நிதி ஒதுக்கீட்டின் ஊடாக அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகளிற்கு தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
மக்களின் சுயதொழில் ஊக்குவிப்பு ,தொடர்பாக கவனம் முக்கிய கவனம் எடுக்கப்பட்டதுடன் பயனாளிகளை இனங்காண விண்ணப்பப்படிவம் விநியோகிக்கபப்பட்டது.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.நிபாகீர் ,எம்.எல் லாபீர் மற்றும் பிரத்தியேக செயலாளர் என்.எம் அப்துல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)