அபு அலா –
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமாரும் உச்சபீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீரின் தனிப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை அஷ்ரப் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு ஒரு தொகுதி உதைப்பந்தாட்ட காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை கபானா ஹோட்டல் பூங்காவில் இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்றது.
அஷ்ரப் விளையாட்டுக் கழக உதைபந்து குழுவின் தலைவர் என்.றஸா அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அஷ்ரப் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எ.றிபாஸ், அமைப்பாளர் ஏ.பௌசுல் அமீர் மற்றும் கழகத்தின் வீரர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)