த.நவோஜ்,ந.குகதர்சன்-
நாம் எமது எதிர்கால சந்ததி பற்றி அக்கறையுடன் இருக்க வேண்டும். எமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் அக்கறையாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்களின் எதிர்காலம் அதில் தான் தங்கியுள்ளது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, கித்துள் போன்ற பிரதேசங்களில் மக்கள் சந்திப்பினை திங்கட்கிழமை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
எம்மைப் பொருத்த மட்டில் நாம் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அல்ல .மாகாண சபை அமைச்சர்கள் எமக்கு அதிகாரமும் குறைவு நிதி வளங்களும் குறைவு. இருப்பினும் எமது மக்களின் தேவைகளை இன உணர்வோடு ஓரளவேனும் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அமைச்சுக்களை பொறுப்பேற்றது. இதன் மூலம் நாம் சேவைகள் செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஆசீர்வாதமும் தேவையாக இருக்கின்றது. அதன் மூலம் தான் நாம் எமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
இந்த ஆட்சி என்பது எமது இடையில் கிடைக்கப் பெற்றது. இதன் ஆயுளும் குறைவு. இன்னும் எமக்கு சுமார் இரண்டு வருடங்கள் மாத்திரமே இருக்கின்றன. இந்த நாட்டின் ஆட்சி மாற்றத்தினால் கிடைக்கப் பெற்றதே இந்த மாகாண சபை அமைச்சுக்கள் இதனை உருவாக்கித் தந்தது எமது மக்கள் தான். இந்த ஆட்சி மாற்றத்தினை எமது மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள் என்பதே உண்மை.
நாம் எமது எதிர்கால சந்ததி பற்றி அக்கறையுடன் இருக்க வேண்டும். எமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் அக்கறையாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்களின் எதிர்காலம் அதில் தான் தங்கியுள்ளது.
பிள்ளைகள் பாடசாலைகளிலோ ஆசிரியர்களுடனோ குறைந்த நேரங்களே கழிக்கின்றார்கள். ஆனால் பெற்றோர்களுடனேயே அதிக நேரம் இருக்கின்றார்கள். எனவே பிள்ளைகளை நன்றாக கஷ்டப்பட்டு படிப்பிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கல்வியைக் கொடுத்தாலே போதும் அவர்கள் எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்து நம்மையும் நமது சமுதாயத்தினையும் உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள்.
எமது சமுகம் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பதை வெறுமனே கல்விச் சமூகம் மாத்திரமல்லாது பெற்றோர்கள் மாணவர்கள் புத்திஜீவிகள் என பல தரப்பட்டவர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
எனவே இந்த அமைச்சுப் பதவிகளையும் தாண்டி அர்ப்பணிப்பு என்ற ரீதியில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்காக பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. அதில் எவ்வித குழப்பங்களும் இல்லாமல் கிடைக்கப்பெற்ற இந்த அமைச்சுக்களின் மூலம் எமது மக்களுக்கு எத்தகைய உதவிகளை மேற்கொள்ள முடியுமோ அவற்றை மேற்கொள்வதற்கு நாமும் எமது கட்சியும் தயாராக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
%2B-%2BCopy.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)