த.நவோஜ்,ந.குகதர்சன்-
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, கித்துள் போன்ற பிரதேசங்களில் மக்கள் சந்திப்பினை கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் கடந்த திங்கட்கிழைமை மேற்கொண்டார்.
இதன் போது பிரதேச மக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுத்தமை பற்றாக்குறை, குடிநீர் பிரச்சினை, குளங்கள் புனரமைக்கப்படாமை, நிலங்களுக்கு உறுதிகள் வழங்கப்படாமை, போன்ற பல்வேறுபட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான விடயங்களுக்கு உரிய அதிகாரிகளை விரைவில் சந்தித்து இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது மதத் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)