மாகாண சபையில் பலமான எதிர்கட்சியாக செயல்படுவோம்- எம்.எஸ். சுபையிர் MPC


றியாஸ் ஆதம்-
கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஜனநாயகத்திற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திரு. சந்திரதாச கலப்பதி அவர்களின் தலைமையில் (31.03.2015) நடைபெற்றது. இதன்போது மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அவசர நம்பிக்கையில்லாப் பிரேரனை மீது உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் இன்றைய நாள் வரலாற்றில் கரைபடிந்த ஒரு நாளாகும். அதுவும் என்னுடைய அரசியல் வாழ்வில் கவலையுக்குரிய ஒரு நாளாகவும் நான் பார்க்கின்றேன். கடந்த 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை ஆட்சியில் பல அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் எனது கட்சியும், தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புகின்ற பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினோம். அந்த வகையில் நான் கடந்த மாகாண சபையில் ஒரு அமைச்சராகவும், தற்போதைய மாகாண சபையில் பிரதி தவிசாளராகவும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்ட்டிருந்தேன்.

ஆனால் தனக்கு வழங்கப்பட்ட பதிவியினை சரிவர செய்திருக்கின்றேன் என்பதிலும் மாகாண சபைக்கு முழுமையான பங்களிப்பினையும் செய்தவன் என்கின்ற நற்பெயரும் எனக்கிருக்கிறது. அந்த அடிப்படையில் எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய முன்னால் தவிசாளர் மற்றும் செயலாளர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 விசேடமாக சிறுபான்மை சமூகத்தினுடைய பாதுகாப்பிற்காகவும் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், எமது நாட்டில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடனும் எனது கட்சியின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் முதன் முதலில் அவருடைய அமைச்சுப் பதவியினை தூக்கி எறிந்துவிட்டு தனது கட்சியின் மகாண சபை உறுப்பினர்கள், மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் தற்போதைய எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கு பாடுபட்டு உழைத்ததனையும் அறிவீர்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எனது ஏறாவூர் மண்ணில் தற்போதைய ஜனாதிபதியின் வெற்றிக்காக ஒன்பது பிரச்சாரக் கூட்டங்களை நடாத்தி தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகிய அரசியல் தலைவர்களையும் அக்கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்தேன். 

கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற முதலமைச்சர் ஜனாதிபதியின் வெற்றிக்காக ஒரு கூட்டத்தைக் கூட நடாத்தவில்லை என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மாத்திரமே கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக ஆதரவாகப் பேசிச் சென்றார். அப்படிப்பட்ட இவர் அவருக்கு உதவி செய்தவர்களை உதறித் தள்ளிவிட்டு தனது பண பலத்தைப் பாவித்து பதவிகளை தக்கவைத்துள்ளார். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்போடு உறவுகளை வைத்துக்கொண்டு இந்த முதலமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார். அந்த ஏமாற்றுக் கதைகளை முன்னால் கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக இன்று தெளிவாக கூறியிருந்தார்.

மேலும் அவர் உறையாற்றுகையில்;

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரதி தவிசாளரை தருவதாக ஏற்கனவே கூறிய இவர் இப்போது என் மீது ஒரு அபான்டத்தினை சுமத்தி கிழக்கு மாகாண சபையினுடைய புனிதத்துவத்தை மாசுபடுத்தி வளர்ந்து வரும் எனது அரசியலை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு அநியாயமும் செய்யாத என்னை சபையில் அசிங்கப்படுத்துவது என்பது மனித நேயமிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எனக்கெதிராக கொண்டு வந்திருக்கின்ற பிரேரணைக்கு ஆதரவு வழங்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும் இருந்தாலும் உங்களுடைய கட்சியின் நிலமைகள் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். கௌரவ உறுப்பினர்களே இந்த முதலமைச்சரை நீங்கள் நம்பாதீர்கள்.  ஏனென்றால், பிரதி தவிசாளர் பதவி தொடர்பாக என்னோடு கலந்தாலோசித்ததாக முதலமைச்சர் இந்த சபையிலே பொய் சொல்லுகின்றார். இதுதொடர்பாக த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் கருணாகரன் மாத்திரமே என்னிடம் கூறினார். எனவே முதலமைச்சர் ஒரு அரசியல் வியாபாரி இவர் ஒரு உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் போராலியுமல்ல, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிக்கு எதிராக செயற்பட்டவர். அந்த கட்சியின் உண்மையான போராளிகள் பலர் இருக்கின்றீர்கள்.

 நான் ஒன்றை மட்டும் இந்த இடத்தில் சொல்கின்றேன் எனக்கு நடந்த இன்றைய நிகழ்வு உங்களுக்கும் எப்போதும் நடக்கலாம் என்பதுடன் இந்த முதலமைச்சரினால் ஜனநாயகத்திற்கு பாரிய ஆபத்தும் கிழக்கு மாகாணத்தினுடைய நிர்வாகத்திற்கு பல சீரழிவுகளுமே ஏற்படும். இந்த விடயத்தில் நாங்கள் ஒரு சிறந்த எதிர்க் கட்சியாக மாகாண சபையில் செயற்பட தீர்மானித்துள்ளதாகவுதம் அவர் மேலும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -