எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை இக்றா வித்தியாலயத்தின் புலமை பரிசில் சித்தி செய்த மாணவர்களையும், திறமைகளை வெளிகாட்டிய மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், FELICITATION CEREMONY 2015 எனும் தலைப்பில் பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.எம்.அஸ்ஹர் தலைமையில் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸிர் தனது உறையின் போது ஒரு திறமையான அதிபராக செயற்பட்டு இக்றா வித்தியாலயத்தின் கல்வி மட்டத்தினை உயர்த்தி இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் மிகவும் சேவை செய்துள்ள அதிபரை பாராட்டுவதாக தெரிவித்தார்.
இதன் போது புலமை பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸிர் பாடசாலை சமூகம் சார்பாக நினைவு பரிசும் சான்றிதழ்களும் வழங்குவதையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட நினைவு பரிசுகள் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர் ஏ.எல்.நழிமுத்தினுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் பிரத்தியோக செயலாளரும் இக்றா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளருமான எம்.எஸ்.எம். ஜஃபர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது கல்விக்காய் அர்பணித்து செயற்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸிர் வலயக்கல்வி பனிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம், பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் எம்.எஸ்.எம். ஜஃபர் ஜே.பி, தேசியக் கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஜ.எம். நவாஸ் மற்றும் கல்விமான்கள் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கபட்டனர்.
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில் ,பிரதேச சபை உறுப்பினர்களும் பெற்றோர்களும், கல்விமான்களும் கலந்து கொண்டனர்.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)