பேரின்பராஜா சபேஷ்-
அம்பாறை - சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை புதிய வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் குடும்பப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மல்வத்தை புதிய வளத்தாப்பிட்டிக் கிராமம் அணைக்கட்டு வீதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவகி (வயது 54) என்ற குடும்பப் பெண்ணே கத்திக் குத்துக்கு இலக்காகி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இவரைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் புதிய வளத்தாப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை நல்லதம்பி (வயது 59) என்பவர் நஞ்சருந்திய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் சம்மாந்துறைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.(ந-த்)
