துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) கருவலகஸ்வெவ வாவி - 8ஆம் கட்டைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் காயமடைந்த நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது குறித்து சந்தேகத்தின் பேரில் 65 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு, அது தவறியதால் துப்பாக்கியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
கருவலகஸ்வெவ பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(ந-த்)
