ஸஹிரியன் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக நியமனம்!



ஹிரியன் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு (ZESDO – 99 Kalmunai Zahirians) இன் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிகழ்வு கடந்த 2025. 12.26 ஆம் திகதி நிந்தவூர் அட்டாஸ் ரிசோட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முக்கிய நிகழ்விற்கு அமைப்பின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உதவி பதிவாளருமான MAM. Siraju அவர்கள் தலைமை வகித்தார். கல்வி, சமூக சேவை மற்றும் மனிதாபிமான பணிகளில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இவ்வமைப்பு, புதிய ஆண்டில் தனது செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன் புதிய நிர்வாக சபையை நியமித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ZESDO நிர்வாக சபை

• தலைவர் (President) :

AHM. Naleem – விஞ்ஞான ஆசிரியர்

• செயலாளர் (Secretary) :

SLM. Aasath – தொழிலதிபர் (Forthmarket Solutions Pvt. LTD.)

• பொருளாளர் (Treasurer) :

M. Sarjoon – பணிப்பாளர் (Azam Jewellery)

• உப தலைவர் (Vice President) :

SH. Ramees – பணிப்பாளர் (Aksaf Rice Mill)

• உதவி செயலாளர் (Asst. Secretary) :

MB. Ranees – AFSM (Amana Takaful)

• வெளியுறவு தொடர்பு அலுவலர் (FRO) :

ULM. Sabreen – வியாபார உரிமையாளர் (WAXPOL)

• ஊடகப் பொறுப்பாளர் (Media) :

MCMC. Rila – தாதிய போதனாசிரியர்.

தாதியர் கல்லுரி, மட்டக்களப்பு

• கணக்காய்வாளர் (Audit) :

MJM. Siyam – Field Manager (HEMAS Pharmaceutical)

ஜனாஸா குழு

• ஜனாஸா குழு ஒருங்கிணைப்பாளர் :

MAM. Siraju – உதவி பதிவாளர், கிழக்கு பல்கலைக்கழகம்

• ஜனாஸா குழு உறுப்பினர்கள் :

o MRM. Farhan – பொறியியலாளர் (CEB – கொழும்பு)

o AM. Rifas – மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

o SHM. Asmy – வியாபார உரிமையாளர்

o SM. Aaris Akber – ES (CEB)

o STM. Sathath – விற்பனை விநியோகத்தர்


நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்கள், புதிய நிர்வாக சபைக்கு வாழ்த்துகளை தெரிவித்து, 2026 ஆம் ஆண்டில் கல்வி வளர்ச்சி, சமூக நலன், மனிதாபிமான சேவைகள் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் ZESDO மேற்கொள்ளும் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைய வேண்டும் என தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

புதிய நிர்வாக சபையின் தலைமையில், ஸஹிரியன் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு எதிர்வரும் காலங்களில் பல பயனுள்ள திட்டங்களை முன்னெடுத்து சமூகத்திற்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :