ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 16ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் பொருளாளர் வைத்தியகலாநிதி எஸ்.லோகநாதன் வரவேற்புரையாற்றுவதையும் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய வரவேற்கப்படுவதையும், மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச்சபையின் தலைவர் வைத்தியகலாநிதி எஸ்.செல்வ மகேந்திரன், பிரதம விருந்தினர் ஆகியோர் உரை நிகழ்த்துவதையும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல், மாவட்டச் செயலகப் பிரதம கணக்காளர் மு.கமலேஸ்வரன், மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்தியகலாநிதி ஆ.கதிர்காமநாதன், மன்னார் மாவட்ட சுதேசமருத்துவ இணைப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி) எஸ் .கார்த்தியாயினி, வட இலங்கை சுதேச வைத்தியசபைத் தலைவர் வைத்தியகலாநிதி எஸ்.ஸ்ரீவிக்னேஸ்வரா, லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக்கல்லூயின் அதிபர் வைத்தியகலாநிதி மு.ஜீவகுமார் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட சுதேச மருத்துவர்களையும் படங்களில் காணலாம்.(ந-த்)
.jpg)