பாணந்துரை மாநகர சபையில் மோதல்: மூவர் வைத்தியசாலையில்!

பாணந்துரை மாநகர சபையில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்தின் போது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதலில் காயமடைந்த உறுப்பினர் ஒருவரும் நிர்வாக அதிகாரிகள் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்த நிர்வாக அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்பில் பாணந்துரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

காயமடைந்த உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்பில் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

மாநகர செயலாளர் ஒருவரை பதவி நீக்கம் செய்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -