வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் உதவித் திட்டங்கள்!

ஊடகப்பிரிவு-
டக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களுடைய பிரணாம அடிப்படையிலான நிதி கொடுப்பனவின் கீழ் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் மதஸ்தலங்கள் என்பனவற்றுக்கு விஷேட உதவித்திட்டங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

முசலி அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், பிரதேச கிராம உத்தியோகத்தர் காஜா முஹைதீன் உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மத ஸ்தலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், விவசாய அமைப்பினர் உட்பட பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சுமார் 15 பாடசாலைகளைச் சேர்ந்த 132 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் 3 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூட தளபாடங்களும் 11 மதஸ்தாபனங்களுக்கு தளபாடங்களும் 10 விவசாய அமைப்புக்களுக்கு விவசாய உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி உதவித் திட்டங்கள் பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்ட போதிலும் குறித்த உதவித் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில முஸ்லிம் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்று இந்நிகழ்வில் உரையாற்றிய கிராம சேவகர் காஜா முஹைதீன் தெரிவித்தார். 

குறிப்பாக முசலி பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் கலாசார உத்தியோகத்தரும் மன்னார் வலயக் கல்வி பணிமனையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரும் குறித்த உதவித் திட்டங்களை உரிய நேரத்துக்கு வழங்குவதில் தவறி விட்டார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் கருத்துத் தெரிவித்தபோது, 

"வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் பொதுவாக அனைவரும் பயன்பெறும் வகையில் நாங்கள் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றோம். 

எனினும் அரசியல்வாதிகளின் செல்வாக்கில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டு எங்களுடைய பரந்துபட்ட நோக்கங்களைப் புரிந்து கொள்ளாது செயற்படுகின்றார்கள், இது வேதனைக்குரிய விடயமே. எதிர்காலத்தில் இத்தகைய விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -