அஸ்கிரிய மகாநாயக்க பீட உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதி கிரியை இடம்பெறும் 12ம் திகதியை உள்நாட்டலுவல்கள் அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.
இறுதி கிரியை ஏற்பாட்டு குழுவை சந்தித்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.ஏ.எஸ்.எச்.பொரலஸ்ஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அன்றைய தினம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் எலிசபத் வைத்தியசாலையில் இருந்து தேரரின் உடல் அந்நாட்டு விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய முடியும் என்றும் சிங்கப்பூர் சென்றுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அத தெரணவிடம் தெரிவித்துள்ளார்.