ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு – மாவட்டத்தில் உயர்தர வகுப்புக்களைக் கொண்டுள்ள இருபது பாடசாலையைச் சேர்ந்த சுமார் நூறு வறிய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப் பரிசில் நிதிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு ஏறாவூரில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி ஏறாவூர் மற்றும் கோரளை மேற்கு ஆகிய கல்விக் கோட்டங்களிலுள்ள மாணிவர்கள் இறுதிக்கட்டக் கொடுப்பனவாக தலா ஆறாயிரம் ரூபாவினைப் பெற்றுக் கொண்டனர்.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகுஅலி தலைமையில் ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்எம் இஸ்மாலெப்பை என் சிதம்பர மூர்த்தி கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ஐஎல் மஹ்ரூப் மற்றும் ஏ.எச்.எம் மீராசாஹிப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
2012 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரிட்சையில் சித்தியடைந்த இவ்வறிய மாணவர்களுக்கு முதற்கட்டக் கொடுப்பனவு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)