விசேட தேவையுடைய சிறார்களுக்கான சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா!

இக்பால் அலி-
ண்டி தெல்தெனிய சிவன் வலது குறைந்தோர் நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய சிறார்களுக்கான சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா கண்டி கெங்கல்ல பொது மைதானத்தில் நேற்று 25-04-2015 நடைபெற்றது.

முதற் தடவையாக வடக்குத் தெற்கை ஒன்றிணைக்கும் வகையில் மூவினங்களைச் சேர்ந்த விசேட தேவையுடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் சிறார்களும் அவர்களுடைய பெற்றோர்களும் ஒற்றுமையுடன் பங்கேற்ற விழா மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

சிவன் வலது குறைந்தோர் நிலையத்தின் தலைவர் கணேஷ் வேலாயுதத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம். புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, பன்விலை, மாத்தளை, நுவரெலியா, கேகாலை ஆகிய வலது குறைந்தோர் நிலையங்களிலிருந்து வருகை தந்த சிறார்களும், அவர்களுடைய பெற்றோர்கள் போட்டிகளில் பங்கு கொண்டதையும் சிவன் வலது குறைந்த நிலையத்தின் தலைவர் கணேஷ் வேலாயுதம் மற்றும் மாரஸ்ஸன விஹாராதிபதி ஆகியோர் போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.(ந)









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -