ஏ.எம் றிகாஸ்-
கல்விப் பொதுத் தராதர உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ள வறிய மாணவர்களை ஊக்குவிக்கும் விசேட திட்டமொன்று அல்- றிலா இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 80 மணவர்களுக்கு கடந்தகால வினா விடைப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான நிகழ்வு கழகத்தின் தலைவர் வீ.ரீ. கபூர் தலைமையில் ஏறாவூர்-றகுமானியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கடந்த 4 வருடங்களுக்கான வினா விடை தொகுப்பு நூல் வடிவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையின் முதல்வர் எம்.ஐ. தஸ்லிம் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக நகர சபை உறுப்பினர் ஏ.ஆர். பிரவுஸ் மற்றும் மாவட்ட இளைஞர் சேவைகள் உதவிப் பணிப்பாளர் முஹம்மட் நைறூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)