கே.சி.எம்.அஸ்ஹர்-
2014இல் முஸ்லிம் விகாகப்பதிவாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு 13.01.14இல் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும், 29.05.14 இல் அம்பாறை கச்சேரியிலும் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு ஒரு வருடமாக எவ்விதத் தகவல்களும் இல்லாமல் இருந்தது. இவ்விடயம் தொடர்பான செய்தி எம்மால் ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டது. இலவு காத்த கிளி போல நேர்முகப்பரீட்சையில் தோற்றியோர் இருக்கின்றனர்.
2015.04.02இல் நேர்முகப்பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மீள உரியவர்கட்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னணி என்ன? புதிய அரசியல் முஸ்லிம் கலாசார அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கலாசார அமைச்சர் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் விவாகப்பதிவாளர் இன்றி படும் அவலங்களைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுப்பாரா?
