மேல் மாகாணசபையில் அங்கம் வகித்து வரும் 20 உறுப்பினர்கள் எனக்கு எதிராக கையொப்பமிட்டால் பதவியைத் துறக்கத் தயார் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பதவி விலக வேண்டுமென மாகாணசபையின் 56 உறுப்பினர்களில் 20 பேர் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு எதிர்ப்பை வெளியிட்டாலும் பதவியை துறப்பேன்.
முதலமைச்சர் பதவியிலிருந்து என்னை வெளியேற்ற சில தரப்பினர் முயற்சிக்கின்றார்கள். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எனக்கே ஆதரவளித்து வருகின்றார்கள் என பிரசன்ன ரணதுங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவியிலிருந்து பிரசன்ன ரணதுங்கவை நீக்க ஆளும் கட்சியின் பிரபல அமைச்சர் ஒருவர் முயற்சித்து வருவதாக வெளியான செய்து குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் தமது பதவியை பறிக்க முயற்சித்தால் நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
(ஸ)
(ஸ)
