பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மாணவர்க்கு இணைந்த கரங்களால் விசேட கணித வகுப்புகள் அங்குரார்பணம்!



காரைதீவு சகா-
ம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சை எடுக்கும்
மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்புகள் ,
இணைந்த கரங்கள் அமைப்பினால் நேற்று (29) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு பாடசாலையின் அதிபர். கே.தியாகராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றது.

"ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில் அவுஸ்திரேலியா இணைந்த கரங்கள் அமைப்பானது வடக்கு கிழக்கில் வசதி குறைந்த பல பாடசாலைகளில் மாணவர்களுக்கான
விசேட மேலதிக வகுப்புகளை இலவசமாக நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள வேப்பயடி கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கணிதபாட விசேட வகுப்புகள் நேற்று திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இணைந்த கரங்கள் அமைப்பின் வேண்டுகோளின் பெயரில், சம்மாந்துறை வலய ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வகுப்பை ஆரம்பித்து வைத்தார்.

பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.

இணைந்த கரங்கள் அமைப்பின் சார்பில் இணைப்பாளர்
காந்தன் கலந்து சிறப்பித்தார்.

சிரேஸ்ட ஆசிரியர் எஸ்.நடனசபேசன் நெறிப்படுத்திய இந் நிகழ்வில் கணித பாட ஆசிரியர் ஏஸ். லோஜிதனும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :