இந்நிகழ்வு, ஓய்வு பெற்ற போதனாசிரியரும் அகில சமாதான நீதவானுமாகிய M. M. உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றிய A. A. ஜபீர் அவர்களின் சேவையை பாராட்டும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் பிரதம அதிதியாக A. A. ஜபீர் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அதேவேளை, விசேட அதிதிகளாக அம்பாரை மாவட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் M. B. நளீம் அவர்களும், நிந்தவூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், முன்னாள் போதனாசிரியருமான A. M. ஜமீல் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பயிற்சி உத்தியோகத்தர்கள், நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள், போதனாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை கௌரவித்தனர். அனைவரும் A. A. ஜபீர் அவர்களின் தொழில்முறை அர்ப்பணிப்பு, நிர்வாக திறமை மற்றும் பணியாளர்களுடன் கொண்ட நெருக்கமான அணுகுமுறை ஆகியவற்றை பாராட்டி உரையாற்றினர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, கௌரவிக்கப்படும் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட அனைவருக்கும் பகற்போசனை வழங்கப்பட்டு, நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
இக்கௌரவிப்பு நிகழ்வு, ஒரு ஊழியரின் உழைப்பையும் சேவையையும் மதித்து பாராட்டும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.



0 comments :
Post a Comment