கல்முனை சாஹிரா கல்லூரி வீதிக்கு கார்பட்: 14 மில்லியன் ரூபாய் PSDG நிதியில் ஆதம்பாவா MP தலைமையில் அபிவிருத்திப் பணி ஆரம்பம்



ல்முனை நகரின் முக்கிய கல்வி நிலையங்களை இணைக்கும் சாஹிரா கல்லூரி வீதிக்கு கார்பட் இடும் அபிவிருத்திப் பணி 2025 டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் Provincial Specific Development Grant (PSDG) நிதியில் இருந்து சுமார் 14 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவ்வீதிக்கு கார்பட் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதற்கு முன்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் இவ்வீதி கார்பட் இடப்பட்டிருந்த போதிலும், அதன் தரம் மிகவும் குறைவாக இருந்ததால், குறுகிய காலத்திலேயே சேதமடைந்து மக்கள், குறிப்பாக மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த சாஹிரா கல்லூரி வீதி, சுமார் 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கல்முனை சாஹிரா கல்லூரி மற்றும் மஹ்மூத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட இரண்டு பிரதான பாடசாலைகளுக்கான முக்கிய அணுகல் பாதையாகும். மழைக்காலங்களில் இவ்வீதி அடிக்கடி வெள்ள நீரால் நிரம்பி வழிவதால், மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா,

“மாணவர்கள் எந்தவிதமான தடையுமின்றி பாதுகாப்பாக பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களின் முதன்மை நோக்கம். அதற்காகவே தரமான முறையில் இந்த வீதி மீள்கட்டமைக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த 45 வருடங்களாக கல்முனை சாஹிரா கல்லூரி வளாகம் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இதற்குத் தீர்வாக சுமார் 30 மில்லியன் ரூபாய் செலவில் மழை நீரை நேரடியாக வடிகட்டி வெளியேற்றும் புதிய வடிகாலமைப்பு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் பாடசாலை வளாகமும், சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இந்த கார்பட் இடும் பணியின் ஆரம்ப நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ். இம்தியாஸ், பிராஜாசக்தி தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நீண்ட காலமாக தரமற்ற வீதியால் பாதிக்கப்பட்டு வந்த இப்பிரதேச மக்கள், தற்போதைய அரசாங்கத்தின் PSDG நிதி மூலம் தரமான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து திருப்தி தெரிவித்தனர். இந்த வீதி அபிவிருத்தி மூலம் கல்வி, போக்குவரத்து மற்றும் பொது பாதுகாப்பு ஆகிய துறைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.













 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :