அவர்களின் வீட்டுக்கு முன் கோழி இறைச்சி வியாபாரம் செய்வதற்காக கடையொன்று கட்டிக் கொடுத்ததோடு கோழிகளையும் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்,
இந் நிகழ்வு நேற்று (வெள்ளி -13) காலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் அசீம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் உரையாற்றும்போது,
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்ற பின்னர் அக்கட்சிகளோடு இணைந்திருந்த தேசிய காங்கிரசையும், அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் கிழக்குமாகான அதிகாரப் பகிர்விலிருந்து ஓரங்கட்டப் பார்பதோடு, ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட கௌரவ உறுப்பினர்களை பல மில்லியன் ரூபாக்களை கொடுத்து வாங்க முற்படுவது இவர் ஜனநாயகத்துக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.மாகாணசபையின் புனிதத் தன்மையை இவ்வாறான ஜனநாயக விரோத செயலுக்கு பயன்படுத்த ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
அது மாத்திரமன்றி,தனது முதலமைச்சர் பதவிக்கு கையெழுத்திடாத ஏனைய உறுப்பினர்களுக்கு பல மில்லியன் ரூபாக்களை கொடுக்க முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீரா திசாநாயக்கே அவர்களை பணித்ததாக ஊடக சந்திப்பொன்றில் கல்வி அமைச்சரே கூறி இருக்கின்றார்.
பணப் பரிமாற்றம் மூலம் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்கள், இப்பணம் அவரது சொந்த ஊரான ஏறவூரில் இவ்வாறு பஷ்மீரைப்போல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எத்தனை குடும்பங்களுக்கு உதவி இருக்கிறது என உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
இங்கு சமுகமளிதிருக்கின்ற மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்க்கை நடாத்தும் நூர்ஜஹான் என்ற பெண் உட்பட பல பேருக்கு ,ஒரு வீடு ஆறரை லெட்சம் ரூபா செலவில் பல வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கின்றேன்.
அதுமாத்திரமின்றி சுமார் 200 பேருக்கு மானியங்கள் எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.
இன்னும் எமதூரில் நூற்றுக் கணக்கான ஏழைக் குமர்கள் திருமணம் முடித்துக்கொள்ள வாழ்விடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்,முதலமைச்சரான நீங்கள் .,இந்த நாட்டின் பணக்காரர்களில் ஒருவராக பேசப்படும் நீங்கள் ஏறாவுரின் எத்தனை ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து ,அவர்களது வாழ் வாதரங்களை உயர்த்தி இருக்கிறீர்கள்.
மாகாணசபைக்கு வருவதற்கு பயன்படுத்தும் வானூர்தி செலவு,உங்களைப் பின்தொடரும் வாகனத் தொடரணி செலவுகளை கட்டுப் படுத்தினாலே ஏறாவுரின் பலதரப்பட்ட ஏழைகளின் கண்ணீரை துடைக்க முடியுமே ?
நீங்கள் இரண்டரை வருடமாக அமைச்சுப் பதவியிலிருந்து இந்த ஊருக்கு செய்த சேவைகள் என்ன ?என்று மக்கள் விளங்கிக் கொண்டதால்தான் முதலமைச்சர் பதவியில் சந்தோசமற்று இருக்கிறார்கள் என்றார்.
