சிறுபான்மை இன வீரர்களில் சிறந்த வீரர்களை தேசிய கிரிக்கெட் அணியில் உள்வாங்க வேண்டும்!

எஸ்.அஷ்ரப்கான்-
காலிறுதி போட்டிக்குத் தெரிவாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர் இறுதிப் போட்டிக்கும் தெரிவாகி வெற்றி பெற்று இலங்கைத் தேசத்திற்கு பெருமை சேர்த்துத் தர வேண்டு மென்று ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட இளைஞர்கள் அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்துள்ளாளர்.

இதுவிடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

இலங்கையில் தற்போது ஜனநாயக சூழ்நிலையும், யுத்தமும் முடிந்துள்ள நிலையில் பொதுவாக இலங்கையின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெறாமை சிறுபான்மை இன தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கைத் தேசத்தில் ஒன்பது மாகாணங்களிலுமிருந்தும் திறமை மிக்க வீரர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கடல் கடந்தும் உலகம் போற்றும் வீரர்களாக திகழ்வதைப் போன்று இலங்கைஅணியும் எதிர்காலத்தில் மாற்றம் பெறக் கூடிய சூழல் காணப்படுகின்றது. ஏனெனில் தற்போதைய நாட்டின் அரசியல் சூழ் நிலை ஜனநாயக அரசியலும், பாரபட்சமற்ற ஆட்சியும், ஊழல்கள் ஒழிக்கப்பட்ட ஆட்சியும் நடந்து வருகிறது. 

இந்த அரசாங்கத்தினுடைய துாண்களாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரும் இந்த விடயத்தில் கரிசனை காட்டுவதோடு, எதிர் வரும் காலங்களில் பொதுவாக வட கிழக்கிலே மையப்படுத்தி இருக்கின்ற வீரர்களில் சிறந்த வீரர்களை தேசிய கிரிக்கெட் அணியில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் இருக்கின்ற சகல இனங்களையும் உள்ளடக்கியதான ஒரு அணியாக இலங்கை கிரிக்கெட் அணி இருப்பதன் மூலமாக இலங்கையின் பாரபட்சமற்ற ஒற்றுமையை உலகத்திற்கு காட்ட முடியும்.

அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் சம்பியனாகத் திகழும் பாடசாலையாக கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை இருக்கின்றது. இவ்வாறு கிழக்கு மாகாணம் அதிலும் அம்பாரை மாவட்டத்தில் இருக்கின்ற திறமையான வீரர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாக வேண்டும். நிந்தவூரை சேர்ந்த நிக்ஸி என்கின்ற வீரர் கொழும்பு ஸாஹிறா பாடசாலை அணியில் விளையாடி வருகின்றார். இவ்வாறான வீரர்கள் தேசிய அணியில் இடம்பெற வேண்டும். இதற்காக நாட்டின் தேசிய தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -