எஸ்.அஷ்ரப்கான்-
வல்கமுவ, மல்வானையைச் சேர்ந்த ஏழை குடும்பஸ்தரான எம்.ஆர்.எம். சுலைமான் (வயது-44) என்பவர் கடந்த 2 வருட காலமாக நுரையீரல் பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். (உடலில் ஒட்சிசன் குறைவடைதல்)
இவரது இந்நோயினை குணப்படுத்த பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பலரது உதவியினால் 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான இயந்திரம் மூலம் செயற்கையாக ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகிறது. இயந்திரத்தின் இயக்கம் மூலம் வாடகைக்கு இருந்து வரும் இவரது வீட்டில் மின்சார பட்டியல் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக வருவதனால் அதனை செலுத்துவதற்காக கடந்த 8 மாதகாலமாக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.
மூன்றரை வயதுடைய எம்.எஸ்.ஸம்ஹா என்ற பெண் பிள்ளையுடன் வாழ்ந்து வரும் இவரது குடும்பத்தில் அன்றாட வாழ்கையை ஓட்டிச் செல்வதற்கு பெரும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகிறார்.
எனவே, கருணையுள்ளம் படைத்த தனவந்தர்கள், பொது அமைப்புக்கள் இவரது நிலையினை கருத்தில் கொண்டு தங்களால் முடியுமான உதவியினை செய்ய முன்வருமாறு வேண்டிக்கொள்கின்றார்.
தனக்கு சொந்தமாக வங்கிக் கணக்கொன்று இல்லாமையினால் தனது தொலைபேசி இலக்கத்திற்கு தங்களது பண உதவியினை செய்யுமாறு வேண்டப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு,
எம்.ஆர்.எம். சுலைமான்,
346/46/B/1,பெலங்காவத்தை,
வல்கமுவ,
மல்வானை
போன்- 0771931380
