தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் அரபு மொழி பீடம் நடாத்தும் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு!

பி.எம்.எம்.ஏ.காதர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் அரபு மொழி பீடம் நடாத்தும் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று காலை (04-03-2015) நான்காம் திகதி இப்பீடத்தின் மாநாட்டு மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 

'மொழிகள், மதங்கள், கலாசாரம், சமூகத்தினூடாக தேசிய அபிவிருத்திக்கான வலுவூட்டல்' எனும் தொனிப்பொருளில் நடாத்தப்படும் இவ்வாய்வு மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்களால் சுமார் 42 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

இந்தியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இஸ்லாமியக் கற்கைகள் அரபு மொழி பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ். எம். எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் அங்குரார்ப்பண உரையை பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மாயில் நிகழ்த்தவுள்ளார்;.

மாநாட்டின் பிரதான உரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவருமான பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் நிகழ்த்தவுள்ளார். பிரதான பேச்சாளர் பற்றிய அறிமுகத்தை சிரேஷ்ட விரிவுரையாளரும் மாநாட்டின் இணைப்பாளருமான  மௌலவி எம். எஸ். எம். ஜலால்தீன் நிகழ்த்வுள்ளார். 

நன்றியுரையை சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி எம். ஜ. எம். ஜெஸீல் நிகழ்த்தவுள்ளார் இம்மாநாடு முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ளதாக  இம்மாநாட்டின் இணைப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -