அமைச்சர் ஹக்கீம் உத்தரவின் பேரில் ஊழியர்களுக்கும் சுமார் 7500 ருபா சம்பளம் அதிகரிப்பு!

அஸ்ரப் ஏ சமத்

மைச்சர் ரவுப் ஹக்கீம் உத்தரவின் பேரில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்விநியோக வடிகாலமைப்புச் சபையில் உள்ள சகல ஊழியர்களுக்கும் சுமார் 7500 ருபா சம்பள அதிகரிப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. 

 நீர்விநியோக வடிகாலாமைப்புச் சபையின் தலைவர் பொறியிலாளர் அன்சார் இன்று ரத்மலானையில் நீர்விநியோக சபையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு மேலும் தலைவர் தகவல் தருகையில்; 

நீர்விநியோக வடிகலாமைப்புச் சபையின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பிணர்களை கடந்த 2 வாரத்திற்கு முன் 38 தொழிற்சங்கங்கள் சந்தித்து 34 வீத மான சம்பளத்தை அதிகரித்துத் தரும்படி வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஊடாக அமைச்சரவைப் பத்திரமும் திறைசேரியின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது. 

அனுமதி கிடைக்கவறை முற்பணமாக 20 வீதத்தை இன்று அதிகரித்து அவர்களின் சம்பள கணக்குகளுக்கு இட்டுள்ளோம். ஆனால் சில தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியில் 20வீதம் மட்டுமே வழங்குகின்றோம் எனச் சொல்லி ஊழியர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். என அண்சார் தெரிவித்தார். செயற்பாட்டுப் பணிப்பாளர் மனிலால் சில்வாவும் இதில் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -