இக்பால் அலி-
முஸ்லிம் சமய காலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் அனுசரணையுடன் கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களை பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் தலைமையில் 23-03-2015இல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீஹ் ஹாஜியார், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எச். எச். சமீல் உள்ளிட்டவர்கள் உரையாற்றுவதையும் பள்ளிவாசலின் பதிவேட்டில் அமைச்சர் கையொப்பமிடுவதையும் அருகில் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் செலாளரும் கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவருமான அல்ஹாஜ் கே. ஆர். ஏ. சித்தீக் ஆகியோர் அருகில் நிற்பதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.