ஓட்டமாவடி அஹமட் இர்சாட்-
இன்று செவ்வாய்கிழமை (24.03.2015) தனது 66வது பிறந்த நாளை கொண்டாடும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி மத்திய கொழும்பு வாழ் மக்கள் சார்பாக தனது பிறந்த நாள் வாழ்த்தினை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பிறந்த நாள் வாழ்த்தில் பைரூஸ் ஹாஜி தெரிவித்ததாவது;
இலங்கையில் கடந்த பத்து வருடங்களாக நிலைநாட்டப்பட்டு வந்த ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவர அரும் பங்காற்றி ஆட்சி மாற்றத்தினை கொண்டு வந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த நாட்டுமக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பினையும், தன்னால் முடிந்த உதவிகளையும் மேலும் செய்வதற்கும் இன்னும் பல ஆண்டுகள் பிரதமர் தேக சுகத்துடன் வாழ்வதற்கும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

