த.நவோஜ்,ந.குகதர்சன்-
மட்டக்களப்பு கொழும்பு பிரதான நெடுஞ்சாலையின் கிரான் கோரகல்லிமடு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் சித்தாண்டி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த சின்னக்குட்டி காசிநாதன் (வயது 65) என்ற வயோதிபரே வானில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வான் கோரகல்லிமடு பிரதான வீதியால் வந்து கொண்டிருந்த முதியவரை மோதியதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரதேச பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
