கின்னஸ் சாதனை படைத்த பூனை - படங்கள்!

னித வாழ்க்கையில் 125 ஆண்டுகள் வாழ்ந்ததற்கு சமமாக, அமெரிக்காவில் பூனை ஒன்று 27 ஆண்டு காலம் உயிருடன் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள சான் டீகோ நகரில் கடந்த 1988 ஆம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி, பிறந்து 6 வாரங்களே ஆன பூனை ஒன்றை அங்குள்ள வளர்ப்பு பிராணிகளுக்கான கடையிலிருந்து ஷரோன் வோர்ஹீஸ் என்பவர் விலை கொடுத்து வாங்கி வந்தார். அதன் பின் அச்செல்ல பிராணியை ஷரோன் கவனத்துடன் வளர்த்து வருகிறார். 

இதன் காரணமாக டிப்பானி 2 என்ற பெயருடன் கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிறம் கொண்டதாக வளர்ந்த அப்பூனைக்கு இது வரை எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.

தற் போது வரை டிப்பானி நல்ல பார்வை பலத்துடனும், காதுகளும் கேட்கும் நிலையிலும் ஆரோக்கியமாக உள்ளதாக ஷரோன் கூறியுள்ளார். எப்போதாவது ஒரு முறை லேசான ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என கூறிய அவர், இது வரை பூனையின் ஆரோக்கியம் எவ்வித குறையும் ஏற்படவில்லை என்றார். 

தொடர்ந்து வீட்டின் மேல் தளத்திற்கும், கீழ் தளத்திற்கு டிப்பானி சென்று வருவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

எனினும் டெக்சாஸை சேர்ந்த க்ரீம் பப் வகை நாய் 38 வருடம் 3 நாள்கள் உயிர் வாழ்ந்து படைத்த கின்னஸ் சாதனையை முறியடிக்க டிப்பானி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -