உதவி பெறும் தலைவிதியை மாற்றி சொந்தகாலால் தலைநிமிர்ந்து வாழ்வோம்-முதலமைச்சர்!

ஊடகப் பிரிவு-
க்கள் மேம் பாட்டுக்கழக நேயம் அமைப்பு ஏழை மக்களின் நலனுக்காக மேற்கொண்டு வரும் உதவிகளின் ஒரு கட்டமாக ஏறாவூரில் வாழும் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் பெறுவதற்கான உபகரனற்களும் மக்களுக்கு குடிநீர் தாங்கியும் நீர் பம்பிமோட்டர்களும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் இந்த அமைப்பின் சேவைகளை பாராட்டியதோடு உதவி பெறுபவர்கள் தொடர்ந்தும் உதவி பெற்றும் வரும் தலைவிதியை மாற்றியமைத்து நாம் சொந்தகாலால் தலைநிமிர்ந்து வாழவேண்டிய நிலை உருவாகும் காலம் வரவேண்டும் என கூறினார். 

அத்துடன் இன மத வேறுபாடுகளை கலைந்து ஏறாவூர் சமூகத்தை ஒன்றுபடுத்தும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான பலாபலன்களை எல்லோரும் விரைவில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகும் எனவும் குறிப்பிட்டார் . 

நேயம் அமைப்பின் இஸ்தாபக தலைவர் இஸ்ஹாக் தலைமையில் நேற்று இடம் பெற்ற இந்நிகழ்வின் போது மாகாண சபை உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா நகரசபை உறுப்பினர் தஸ்ஸீம், மட்டக்களப்பு மாவட்ட பொலீஸ் அதிகாரிகள் பள்ளிவாயல் சம்மேலன தலைவர்கள் என பலரும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -