பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு எதிராக இலங்கை சட்ட மா அதிபரினால் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னால் பாராளுமன்றஉறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட மூவரின் மரணம் தொடர்பில், துமிந்த சில்வா உள்ளிட்ட தரப்பினருக்கு மொத்தமாக 17 குற்றச்சாட்டக்கள் சுமத்தப்பட்டுள்ளன.இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
