மாகாண சபை உறுப்பினர் அன்வர்-
கடந்த மகிந்த அரசாங்கத்தால் ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக நாட்டில் மைத்திரிபால ஸ்ரீசேன தலைமையிலான குழுவினரின் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பல தேவைப்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டிக்கின்ற தருனத்தில் நாட்டிலுள்ள மாகாண சபைகளில் கிழக்கு மாகாணம் பல்லின சமூகங்களை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு மாகாண சபை நாட்டின் ஆட்சி மாற்றத்தோடு கிழக்கு மாகாண சபையின் ஆட்சி மாற்றமும் பலவாரரக பேசப்பட்டு வந்தது.
கடந்த மாதம் தமிழ் பேசும் கிழக்கு முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லீம் ஒருவருக்கு வழங்க்ப்பட்டிருப்பதை நாம் அறிவோம் மிகுதியாகவுள்ள அமைச்சு தவிசாளர் மற்றும் உப தவிசாளர் போன்ற பதவிகளை கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு பகி;ர்ந்தளித்து தேசிய அரசாங்கம் கொண்ட சபையை நல்லாட்சியின் கீழ் தொடந்து செல்வதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமினால் ஊடக சந்திப்பின்போது பகிரங்க அழைப்பு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டு தற்பொழுது பங்கீடு தொடர்பாக பேச்சு வார்தைகள் இடம்பெற்;று வருகின்றன
இதற்கிடையில் கிழக்கு முதல்வர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிஸினால் முன்வைக்கப்படும் நியாயங்கள்
கடந்த 2012ம் ஆண்டு மகிந்த ராஜக்சவின் அரசாங்கத்தில் இரண்டாவது கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளராக இருந்த முன்னால் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளராக இருந்த தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீ சேன போன்ற சாட்சியாளர்கள் முன்னிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு இரண்டரை வருடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நியாயங்கள்
தாம் பதினொரு உறுப்பினர்கள் கொண்ட கட்சி பெரும்பான்மை தம்மிடமே உள்ளன தமக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஏழு உறுப்பினர்களை மாத்திரம் கிழக்கு மாகாண சபையில் கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு கிழக்கு முதல்வர் வழங்குவது என்பது நியாயமற்றது என்ற கருத்து நிலவியது
உண்மை அதுவல்ல தமிழ்தேசிய கூட்டபை;பினை பொருத்தவரையில் பதினொரு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் கிழக்கு மாகாண சபையை பொருத்தளவில் மொத்தமாக பதினைந்து முஸ்லீம் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் இவ்வாறு வடக்கு மாகாண சபையை பொருத்தளவில் தமிழ் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளதால் தமிழ் முதல்வர் ஆட்சி செய்வது நியாயமானது அவ்வாரே கிழக்கை பொருத்தமட்டிலும் அது எவ்வாறு பொருந்தாமல் இருக்கும்
அன்மைக்காலமாக எமது கட்சியின் ஏழு உறுப்பினர்களோடு சேந்து அதாஉள்ளாவின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் ரிஸாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அதே கட்சியை சேர்ந்த அமீ;ர் அலியின் வெற்றிடத்துக்கு வந்த புதிய மாகாண சபை உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா போன்ற மூவரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸில் இணைந்ததன் பின்னர் மொத்தமாக பத்து உறுப்பினர்களை கொண்ட ஒரு பெரும் கட்சியாக உள்ள நிலையில் எந்த கோணத்தில் பார்த்தாலும் முஸ்லீம் காங்கிரஸுக்கே கிழக்கு முதல்வர் பதவி பொருத்தம் என்பதை நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் அங்கிகரித்தன் விளைவாகவே வழங்கப்பட்டிருக்கின்றது
இருந்தும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகள் மிகுதியுள்ள பதவிகளை பங்கிடுவது தொடர்பாக இணகக்ப்பாட்டுடன் பேசிவருகினற் நிலைமையில் சக்தி தொலைக்காட்சி தமிழ் மக்களிடமிருந்து மாத்திரம் முதலமைச்சர் பதவி தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குவது நியாயம் என்பதை காலம் கடந்த ஞானம் என்பதுபோல் சாதாரண மக்கள் மத்தியில் புகுத்தி தமிழ் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது மாத்திரமல்லாமல் நாட்டில் வாழ்கின்ற தமிழ் முஸ்லீம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்துகின்ற நிலையயை அவதானிக்க கூடியதாக உள்ளது அது மட்டுமல்ல கருத்துக்கள் பெறப்படும் போது இரு சமூகங்களை சார்ந்தவர்களிடம் இருந்து கருத்துக்கள் பெருவது நியாயமானது அதை விடுத்து ஒரு சமூகத்திடமிருந்து மாத்திரம் கருத்துக்கள் பெறுவது ஊடக நாகரீகமாகவும் அமையாது
இவ்வாறு அரசியலுக்கப்பால் சாதாரன மக்கள் மத்தியில் கசப்புணர்வுகளை ஏற்படுத்துவது என்பது மக்களுக்கு நியாயமான முறையில் நடுசிலைமை தவறாமல் செயற்படல் குறித்த நிறுவனத்தின்மீதுள்ள நம்பிக்கை தொடர்ந்து பேணப்படுதல் இந்த நல்லாட்சியில் அவசியமாகனது ஒன்றாக உள்ளது
%2Bcopy.jpg)