பழுலுல்லாஹ் பர்ஹான்-
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க 14 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலுள்ள இலங்கை விமானப் படையின் உள்ளுர் விமான நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு விஜயம் செய்த அமைச்சர் மட்டக்களப்பு விமான நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயாணிகள் இளைப்பாரும்; மண்டபத்தையும், விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற விமான ஓடுபாதையையும் பார்வையிட்டார்;.
இதன் போது மட்டக்களப்பு விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க மட்டக்களப்பு விமானப் படை இணைப்பதிகாரி அதுல களு ஆராச்சியிடம் கேட்டறிந்து கொண்டார்.
இவ் விஜயத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி டக்டாஸ் பனாகொட மற்றும் துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட மட்டக்களப்பு விமானப் படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)