இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.முஸ்மி அவர்களின் ஏற்பாட்டில் இன்று ௦3.௦2.201 கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மகஜரை பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எம். அன்சார் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் சிரேஷ்ட தலைவர் எஸ்.எல்.அரூஸ்,மத்திய குழு உறுப்பினர் ஏ.ராயிஸ் மற்றும் கிழக்கு மாகான சபை உறுப்பினர் நசீர் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கெ.எல் சமீம் ஆகியோர் பங்குபற்றினர்.
இவ் வீதியில் முக்கியமான அரச நிறுவனங்கள் அமைந்து காணப்படுகின்றது குறிப்பிட்ட வீதியில் நீர்வளங்கல் அதிகாரசபை, பிரதேச வைத்தியசாலை, கால்நடை அலுவலகம், சமூர்த்தி வங்கி, பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், வங்கிகள், பிரதேச சபை, பெரிய வள்ளிவாசல், கனிஷ்ட கல்லூரி, அஷ்ரப் மத்திய கல்லூரி என்பன இவ்வீதியில் அமைந்துள்ளது.
இவ்வீதி நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யைப்படாமையால் பொதுமக்கள் பல அசொகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் இம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வீதி நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யைப்படாமையால் பொதுமக்கள் பல அசொகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் இம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
