இறக்காம பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.முஸ்மி அவர்களின் ஏற்பாட்டில் இன்று (௦3.௦2.2015) இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு கெளரவ இராஜாங்க சுகாதரா அமைச்சர் எம்.ரீ ஹசன் அலி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம் மகஜர் அமைச்சரின் செயலாளர் எம்.ரீ ஜப்பார் அலியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் சிரேஷ்ட தலைவர் எஸ்.எல்.அரூஸ்,மத்திய குழு உறுப்பினர் ஏ.ராயிஸ்,கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கெ.எல் சமீம் ஆகியோர் பங்குபற்றினர்.
இதன் போது இறக்காமத்தின் நீண்ட கால தேவையாக உள்ள இவ்விடையம் பல அரசியல் வாதிகளிடம் முன்வைக்கப்பட்டும் இன்று வரை நடைபெற வில்லை இதனை அமைச்சரின் செயலாளர் இதனை பூர்த்தி செய்து தருவதாக தருவதாக உறுதியளித்தியுள்ளார்.
