சுதந்திர சதுக்கத்தில் தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வுகள்-சந்திரிக்கா,ராஜித பங்கேற்பு

நாட்டின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் நாளை நண்பகல் 1.30 மணியலவில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, சுகாதர மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தன, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பல்கலைக்கழக ஆசிரிய சங்க சம்மேளத்தின் முன்னாள் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறையின் சிரேஷ்ட விரிவுரையாலருமான கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி, தேசிய சூரா சபையின் தலைவர் ஜே. தாரீக் மஹ்மூத், சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய சூரா சபையின் பேச்சாலரும் நிறைவெற்றுக் குழு உறுப்பினருமான சட்டத்தரணி ஜாவித் யூசுப் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

இன் நிகழ்வில் அணைத்து சகோதர, சகோதரிகளும் பங்குபற்றுமாறும், இச் செய்தியை ஏணைவருக்கு எத்தி வகைக்குமாரும் தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக் குழு வேண்டிக் கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -